முகப்பு
தற்போதைய செய்திகள்

நான்குனேரி அருகே விபத்தில் இருவர் சாவு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவில் விபத்தில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் மீது லாரி மோதியதில் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:47 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவில் விபத்தில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் மீது லாரி மோதியதில் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

திருநெல்வேலி-நாகர்கோவில் பிரதான நான்கு வழிச்சாலையில் தெற்குகருங்குளம் அருகில் கார் ஒன்று விபத்தில் சிக்கியதாம். இந்த காரை மீட்கும் பணியில் பொக்லைன் பயன்படுத்தப்பட்டது.

இந்த பொக்லைன் இயந்திரத்தை கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த பெலிக்ஸ், கார்த்திக் ஆகியோர் இயக்கினராம். அப்போது பழவூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற கல்குவாரி லாரி ஒன்று, பொக்லைன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெலிக்ஸ், கார்த்திக் இருவரும் சம்பவ இடத்திலே இறந்தனர். தகவலறிந்த பழவூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →