போலி பாஸ்போர்ட்டில் துபை செல்ல முயன்றவர் கைது
துபை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.
துபை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.
துபை செல்லவதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்,
இதில் புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்திரசேகர் (45), என்பவர், அதே மாவட்டம்,ஆவுடையார் கோயில், வரி்க்குடி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சரவணன் (50) என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து துபை செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர்.