ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட தி.மு.க.வினர் முயற்சி:
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை திங்கள்கிழமை திடீரென தி.மு.க.வினர் முற்றுகையிடச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட தி.மு.க.வினர் முயற்சி:
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை திங்கள்கிழமை திடீரென தி.மு.க.வினர் முற்றுகையிடச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை திங்கள்கிழமை திடீரென தி.மு.க.வினர் முற்றுகையிடச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.
போலீஸார் இவர்களை தடுத்து நிறுத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் நுழைவு வாயில் அருகே அ.தி.மு.க. நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் இருந்து பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி அனைத்து அரசு பேருந்துகளையும் இயக்க கடந்த இரு நாட்களாக தீவிர முயற்சி எடுத்துக் கொண்டருந்தனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பணிமனையில் உள்ள 64 பேருந்துகளில் 54 இயக்கப்பட்டது.
இதனை அறிந்த தி.மு.க.வினர், கட்சியின் நகரச் செயலாளர் வழக்குரைஞர் ஜி.ஜி.அய்யாவுப்பாண்டியன், ஒன்றியச் செயலாளர் கு.ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் திங்கள்கிழமை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினரை பணிமனையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்த சென்றனர்.இதனை அறிந்த போலீஸார் இவர்களை பணிமனைக்கு சற்று முன்பே தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் டி.எஸ்.பி. முரளிதரன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
144 தடை உத்தரவு அமலலில் உள்ளது. கூட்டமாக யாரும் செல்லக் கூடாது என்றார். அப்போது தி.மு.க. வினர் அ.தி.மு.க.வினரை பணிமனையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரினர். இல்லையென்றால் செவ்வாய்கிழமை தொகுதி முழுவதும் பஸ் மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தனர். பின்னர் போலீஸார் அலுவலகத்திற்கு வாருங்கள் பேசிக்கொள்வோம் என்று கூறியதையடுத்து தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.இதனால் இப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.