முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநள்ளாறு சென்று விட்டு திரும்பிய போது விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் திருநள்ளாறு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விருதுநகரில் லாரி மீது அவர்கள் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள்.

Updated On : 30 டிசம்பர், 2014 at 12:37 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:18 PM

தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் திருநள்ளாறு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விருதுநகரில் லாரி மீது அவர்கள் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது45). இவர் தனது குடும்பத்தினருடன் கார் ஒன்றில் திருநள்ளாறு சென்று தரிசனம் முடித்து விட்டு நேற்றிரவு ஊருக்கு திரும்பியுள்ளார். இவர்களுடைய கார் இன்று அதிகாலை விருதுநகர் ஆர்.ஆர்.நகர் அருகே மதுரை-நெல்லை நெடுஞ்சாலையில் வந்த போது சிக்னல் இல்லாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சரவணனின் உறவினர் பாலசுப்ரமணியன் மகன் பொன்ராஜ் (40), பொன்ராஜின் மனைவி பிரியா (26), அவர்களது 2 மாதக் குழந்தை பாலவிஷாலியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

இந்த விபத்தில் சரவணன் (44), அவரது மனைவி லட்சுமி (41), முத்துக்குமரன் (28),  பிருத்வி தங்கம் (10), முத்துசௌமியா (6) ஆகியோர் காயமடைந்தனர்.

காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 3 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.