நெல்லை, தூத்துக்குடியில் மழை ; அணைகளின் நீர்மட்ட நிலவரம்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது.
திங்கட்கிழமை துவங்கி இரவு வரை பலத்த மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 141.35 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 151.67 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 117.40 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 79.40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 79.75 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 59.93 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 49.21 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 92.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாகவும் இருந்தது.