முகப்பு
தற்போதைய செய்திகள்

பொறியியல் தொழில்நுட்பங்களால் வேளாண்மையை மேம்படுத்தலாம் :இந்திய தொழில்நுட்பக் கழகதலைவர் ம.நடராஜன் பேச்சு

திருநெல்வேலியில் நடைபெற்ற பொறியியல் பட்டமளிப்பு விழாவில், ம.நடராஜன் மேலும் பேசியதாவது:எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு முகம் மட்டுமே இருக்காது. பல்வேறு முகங்கள் இருக்கும். தொழில்நுட்பக்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

நவீன பொறியியல் தொழில்நுட்பங்களால் வேளாண்மையை மேம்படுத்த முடியும் என்றார் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் ம.நடராஜன்.

திருநெல்வேலியில் நடைபெற்ற பொறியியல் பட்டமளிப்பு விழாவில், ம.நடராஜன் மேலும் பேசியதாவது:எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு முகம் மட்டுமே இருக்காது. பல்வேறு முகங்கள் இருக்கும். தொழில்நுட்பக் கல்வி கற்றுள்ளவர்கள் அனைத்து வழிகளையும் ஆராய்ந்து தீர்க்க முயற்சிக்க வேண்டும். இஸ்ரேல் போன்ற நாடுகளில் பாலைவனங்களில் கூட, பூமியின் குறிப்பிட்ட ஆழத்தில் நவீன பொறியியல் தொழில்நுட்பங்களால் மண்ணை குளிர்ச்சிப்படுத்தி மண்ணின் மேற்பகுதியில் நிழலின் கீழ் விதைகளைப் புதைத்து குறைந்த தண்ணீர் செலவில் தோட்டம் அமைத்து வெற்றி காண்கிறார்கள்.

பாளையங்கோட்டை முதல் திருச்செந்தூர் வரை செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள பல்வேறு பகுதிகள் உள்பட நம் நாட்டில் ஏராளமான நிலங்கள் வறட்சியின் பிடியால் சிக்கி வேளாண்மை செய்யாமல் கிடக்கின்றன. இதுபோன்ற நிலைக்கு நாம், நமது அறிவை பயன்படுத்தவில்லை என்பது மட்டுமே சரியான பதிலாக இருக்கும். அதிநவீன பொறியியல் தொழில்நுட்பங்களால் வேளாண்மையை மேம்படுத்த முடியும். அதற்கான ஆராய்ச்சிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் தாங்கள் நினைத்த பணி கிடைக்கும் என்பது அரிதானது. கிடைக்கின்ற பணியில் உள்ள அனைத்துவித பிரச்னைகளையும் தீர்க்க வல்லவர்களாகத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்தவொரு பணியிலும் கற்றுக்கொள்ளும் பக்குவத்தை விட்டு விடாமல் தொடர்ந்து பணியாற்றினால் மிகவும் எளிதாக முன்னேற முடியும்.

உணவுப் பதப்படுத்துதல், உயிர்தொழில்நுட்பம், தகவல் தொடர்பியல் துறைகளில் நல்ல வளர்ச்சி உள்ளது. ஆற்றல், மருத்துவம், உடல்நலம், கட்டமைப்புப்பணிகள், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளிலும் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். சுற்றுப்புறசூழலைக் காப்பது, மறுசீரமைப்பு, நீர்நிலைகளைத் தூர்வாருதல், கழிவுநீர் மேலாண்மை போன்ற துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக வேண்டும். யாராக இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனநிலை இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

 இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சூரியமின் சக்தியின் தேவை அவசியமாகும். சூரியசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து பயன்படுத்தும் சூழல் உள்ளது. வெப்பம் மிகுந்த நம் பகுதிகளில் பேட்டரிகள் எளிதாக செயலற்று போய்விடும். அவ்வாறு செயலற்றுப்போகும் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வது அல்லது அழிப்பதால் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும். எனவே, பேட்டரிகளை குளிர்விக்கும் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இதுதவிர சூரியமின்சக்தியை மின்சாதனங்களில் நேரடியாக பயன்படுத்துவது உள்ளிட்ட முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →