தற்போதைய செய்திகள்

2-சக்கரவாகன டயர் வெடித்ததில் பெண்பலி

தேனிமாவட்டம் சின்னமனூர்,  சுக்காங்கல் பட்டி அருகேயுள்ள ஒத்தவீட்டிற்கு அருகே 2 சக்கரவாகனத்தில் சென்ற போது பின் சக்கரம் வெடித்ததில், பின்னால் அமர்ந்து வந்தவர்

சந்திரசேகரன்

தேனிமாவட்டம் சின்னமனூர்,  சுக்காங்கல் பட்டி அருகேயுள்ள ஒத்தவீட்டிற்கு அருகே 2 சக்கரவாகனத்தில் சென்ற போது பின் சக்கரம் வெடித்ததில், பின்னால் அமர்ந்து வந்தவர் கீழேவிழுந்தில்  உயிரிழந்தார்.

   சுக்காங்கல் பட்டியைச்சேர்ந்த துறை(42) கொத்தனார் வேலை செய்துவருபவர். இவர் நேற்று மாலை தன்மனைவி ராஜீ(35)யுடன் 2 சக்கரவாகனத்தில்  பொருள்கள் வாங்குவதற்காக சின்னமனூருக்கு சென்று கொண்டிருந்த போது சுக்காங்கல் பட்டியை அடுத்துள்ள ஒத்தவீடு என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த போது 2 சக்கரவாகனத்தின் பின்பகுதியில் உள்ள சக்கரம் தீடீரென வெடித்ததில் நிலைதடுமாறியதில் பின்னால் அமர்திருந்த அவருடைய மனைவி ராஜீ கீழே விழுந்தார். அப்போது தலையின்  பின்பக்கத்தில் அவருககு பலத்த அடிபட்டது.

அதன் பின் உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.இதனை அடுத்து தகவல் அறிந்த ஒடைப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT