தற்போதைய செய்திகள்

2021ல் ஆட்சியை பிடிப்போம்; திமுக. காங்.கூட்டணி அமைந்தால் எதிர்த்து பிரசாரம்: சீமான்

திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை

சா. ஜெயப்பிரகாஷ்

திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

  திருச்சியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

  நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.

  இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே தோற்றுப் போன கட்சிதான் அது. ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் காங்கிரஸைத் தோற்கடிக்க பிரசாரம் செய்ய வேண்டி இருக்கும்.

  பாஜகவைப் பொருத்தவரை எந்தவகையிலும் அது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றானது அல்ல. இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடைபெற்றபோது பாஜகவினரும்கூட  எதுவும் சொல்லவில்லை. இப்போதும், ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு என்ன செய்வோம் என்று உறுதியான எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

  பல முறை மோடி தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், தமிழர்களைப் பற்றிய எந்த கருத்தையும் அவரது பேச்சில் குறிப்பிடவே இல்லை. எப்படி அவர்களை நம்புவது வைகோ எந்த அடிப்படையில் சேர்ந்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

  சாஞ்சிக்குச் சென்று போராட்டம் நடத்தினார், அது யாரை எதிர்த்து என அவரைத்தான் கேட்க வேண்டும். சாதியையும் மதத்தையும் வைத்து நடத்தும் அரசியலை ஏற்க முடியாது.

  இப்போது கடல் தாமரை போராட்டத்தை நடத்துபவர்கள் கடந்த ஆண்டு எங்கே இருந்தார்கள் அரசியல் தேவைக்காக, வாக்குகளை அறுவடை செய்வதற்காக நடைபெறும் முயற்சி இது. அவர்களை நம்ப முடியவில்லை.

  இலங்கை கடற்படை நம் மீனவர்களைத் தாக்குகிறது. ஆனால், இலங்கை மீனவர்களையும், தமிழ் மீனவர்களையும் வைத்து அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கச்சத்தீவை பெறாமல் இதற்கான தீர்வு கிடைக்காது.

  திமுகவில் நடைபெறும் குடும்பச் சண்டை குறித்து எதுவும் சொல்ல முடியாது. தேர்தலுக்குள் அது சரியாகிவிடும். ஏற்கெனவே இதுபோல பல முறை நடந்திருக்கிறது என்றார் சீமான்.

  பேட்டியின்போது, திருச்சி மாநகர ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT