முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவர் தூக்கிட்டு சாவு

அறந்தாங்கி குரும்பகாடு தனியார் மேல்நிலைப் பள்ளியில்(லாரல்) திங்கள் கிழமை காலையில்  பிளஸ்-2 மாணவர் தூக்கில் இறந்துகிடந்ததால் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

அறந்தாங்கி குரும்பகாடு தனியார் மேல்நிலைப் பள்ளியில்(லாரல்) திங்கள் கிழமை காலையில்  பிளஸ்-2 மாணவர் தூக்கில் இறந்துகிடந்ததால் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

குரும்பக்காடு மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்துவருபவர் கீரமங்கலம் கொடிக்கரம்பையை சேர்ந்த முத்துச்சாமி மகன் அருண்ராஜ்(17) பள்ளி இறுதி தேர்வை முன்னிட்டு விடுதியில் தங்கியிருந்த அருண்ராஜ் பள்ளி வகுப்பறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு படித்துக்கொண்டிருந்துள்ளார்.இந்நிலையில் மற்ற மாணவர்கள் விடுதிக்கு திரும்பி விட்ட நிலையில் மாணவர் அருண்ராஜ் வகுப்பறையில் இருந்த மேல் விட்டத்தில் கயிற்றில் தூக்கில் தொங்கி இறந்துகிடந்துள்ளார்.

திங்கள் கிழமை காலையில் பார்த்த நிர்வாகத்தினர்  பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தங்கள் மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி  உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

தகவலறிந்த அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க.துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நா.அருள்முருகன்,  வட்டாட்சியர் கோ.தவச்செல்வம், காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.