ரஷ்யாவில் பாதுகாவலரை கொன்று துப்பாக்கி முனையில் பள்ளி மாணவர்களை சிறைபிடித்த மர்ம மனிதன்
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் நுழைந்தான்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் நுழைந்தான். அப்போது தடுக்க முயன்ற பாதுகாவலரை சுட்டுக்கொன்றான்.
பின்னர் ஒரு வகுப்பறைக்குள் புகுந்த அவன்20 மாணவர்களை சிறைபிடித்துவைத்துள்ளதாக ரஷ்யா24 டெலிவிசன் இது தொடர்பாக செய்திவெளியிட்டுள்ளது.
அதில் பள்ளிக்கூடத்தை பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்படரில் சுற்றிவளைத்துள்ளதாக கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்படடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.