முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்துக்கு வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தனியார் வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள்

Updated On : 4 பிப்ரவரி, 2014 at 2:55 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தனியார் வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு பறக்கும்படை தனி தாசில்தார் சுகிபிரேமலா, வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஓட்டுநர் ஜான்பிரைட் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த தனியார் வேனை சந்தேகத்தின் பேரில் பின் தொடர்ந்தனர். வேனை அதிகாரிகள் பின் தொடர்வதை கவனித்த வேன் ஓட்டுநர், குழித்துறை சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து வேனை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பியோடினார்.

தொடர்ந்து அதிகாரிகள் வேனை சோதனை செய்தபோது, அதில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வேனில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.