முகப்பு
தற்போதைய செய்திகள்

கெஜ்ரிவாலை கண்டித்து சிதம்பரத்தில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் தலைவர்கள் மீது ஊழல் புகார் கூறும் கெஜ்ரிவாலை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வரும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் தலைவர்கள் மீது ஊழல் புகார் கூறும் கெஜ்ரிவாலை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வரும் லோக்பால் மசோதாவை எதிர்க்கும் எதிர்கட்சிகளை கண்டித்தும் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.புரட்சிமணி தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன், மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏ.ராதாகிருஷ்ணன், ஆர்.சச்சிதானந்தம் தொழிலதிபர் கே.ஐ.மணிரத்தினம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் கே.ஜி.குமார், மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், பொதுச்செயலாளர் எம்.என்.ராதா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் துரை.சிங்காரவேலு, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த், எம்.ஜி.ராஜராஜன், காட்டுமன்னார்கோயில் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.வி.இளங்கீரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் புவனகிரி சவுந்திரபாண்டியன், கே.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.