புத்துணர்வு முகாமில் முடித்து திரும்பிய பழனிக்கோயில் யானைக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
பழனி திருக்கோயிலில் சுவாமி புறப்பாடு மற்றும் கோயில் தேரோட்டங்களில் பங்கேற்று பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது பழனி திருக்கோயில் யானை கஸ்தூரி ஆகும். கோயில் திருவிழாக்களில்
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் முடித்து திரும்பிய பழனிக்கோயில் யானை கஸ்தூரிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
பழனி திருக்கோயிலில் சுவாமி புறப்பாடு மற்றும் கோயில் தேரோட்டங்களில் பங்கேற்று பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது பழனி திருக்கோயில் யானை கஸ்தூரி ஆகும். கோயில் திருவிழாக்களில் கஸ்தூரி யானையை பார்க்கவே பக்தர்கள் கூட்டம் வருவது வழக்கம். 47 வயது நிரம்பிய கோயில்யானை கஸ்தூரி தமிழக அரசின் யானைகள் புத்துணர்வு முகாமிற்காக கடந்த ஜன.18ம் தேதி மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டிக்கு கிளம்பி சென்றது.
48 நாட்கள் நடைபெற்ற யானைகள் புத்துணர்ச்சி முகாம் பிப்.4ம் தேதி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு கிளம்பிய பழனிக்கோயில் யானை கஸ்தூரி புதன்கிழமை காலை 9 மணியளவில் பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை கல்லூரிக்கு முகாமிற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வந்த யானை கஸ்தூரிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. முகப்பட்டம், அங்கி, காலுக்கு கொலுசு மற்றும் பெரிய மாலை அணிவிக்கப்பட்டு பூசணிக்காய் சுற்றப்பட்டு கோயிலுக்குள் அழைத்து வரப்பட்டது.
நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, மேலாளர் ரவி, கண்காணிப்பாளர் ராஜேந்திரன், பேஷ்கார் நாராயணன், மணியம் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழனி கால்நடை மருத்துவர் சக்திவேல் பாண்டியன் கூறுகையில், பழனிக்கோயில் யானை கஸ்தூரி முகாமிற்கு செல்லும் போது 4,975 கிலோ இருந்தது. தற்போது முகாம் முடித்து திரும்புகையில் 135 கிலோ குறைந்து 4,840 கிலோ எடையுள்ளது. முகாமில் யானைக்கு முழு உடல் பரிசோதனை, இயற்கையான சூழலில் நடைப்பயிற்சி, நல்ல பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளது. யானை நல்ல மனநிலையுடன் புத்துணர்ச்சியுடன் உள்ளது என தெரிவித்தார்.