முகப்பு
தற்போதைய செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி: நெல்லையில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறும் தமிழக வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாளையங்கோட்டையில் விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறும் தமிழக வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாளையங்கோட்டையில் விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் தேசிய, சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு தமிழக அரசுப்பணி வழங்க வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் வெல்லும், கலந்து கொள்ளும் வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். உலக சாம்பியன்ஷிப், உலக கோப்பை, ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஆசியா சாம்பியன்ஷிப், சர்வதேச தரத்தில் நடைபெறும் விளையாட்டுகள், தெற்கு ஆசியா விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கும், மேற்கண்ட போட்டிகளில் 3 முறையும் அதற்கு மேலும் பங்கேற்கும் வீரர்கள், தேசிய போட்டியில் 3 முறை தங்கம் வென்ற வீரர்களுக்கும் அரசுப் பணி வழங்க வேண்டும்.

தமிழக காவல்துறையில் பணி செய்து கொண்டு, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். தமிழக சேர்ந்தவர் கின்னஸ் சாதனை அல்லது ஏதாவது ஒரு துறையில் சாதனை படைத்தால் அதனை ஏற்று அரசுப் பணி வழங்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப் பரிசு, விருது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரி்க்கைகளை வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் புதன்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத்துக்கு இந்தியன் கிக்பாக்சர் இ. இசக்கிராஜா தலைமை வகி்த்தார். கல்லூரி மாணவர் பிரதிநிதிகள் வேல்முருகன், மீரான்மைதீன், முத்துபாண்டி, சுந்தரமணிகண்டன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, சட்டக் கல்லூரி, ம.தி.தா. கல்லூரி, தூய யோவான் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →