தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. பட்டமேற்படிப்பு 11 அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் 11 அரசு மருத்துவர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜி சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் 11 அரசு மருத்துவர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி உயிர் வேதியியல்துறை முதுநிலை மருத்துவ மாணவர் மரு.தி.பாரிவளவன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தேதி முதல் 11 அரசு மருத்துவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திள் மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வருகிறோம். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழகஅரசே ஏற்று நடத்துகிறது. தமிழக மருத்துவக்கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் அரசு மருத்துவர்களுக்கு முழுச் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி கட்டணம் வருடத்திற்கு ரூ.2,70,000 முதல் ரூ.6, 20,000 வரை பல்வேறு மருத்துவப் பிரிவிற்கு ஏற்ப கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. இந்த கட்டணம், அரசு மருத்துக்கல்லூரி வருடாந்திர பயிற்சி கட்டணத்தை விட பல மடங்கும் அதிகமாகும். 11 அரசு மருத்துவர்களும் திருமணமாகி, குழந்தைகளுடன் உள்ளவர்கள். இவர்கள் பட்ட மேற்படிப்பு படித்து, தங்களது பணி ஓய்வுக்காலம் வரை அரசு மருத்துவப்பணியில் பணியாற்றுவதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களை விருப்பத்தின் பேரில் பொது சுகாதாரத்துறை பட்ட மேற்படிப்ப பயில அரசே, முழுச்சம்பளத்துடன் அனுப்பி வைக்கிறது. ஆனால் அண்ணாமலைப் பல்கலையில் அரசு சம்பளம் கிடைக்காமல் அவதியுறுகிறோம். எனவே தமிழக முதல்வர் தலையிட்டு 11 பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு சம்பளம் கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் மாணவர் மரு.தி.பாரிவள்ளல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய் கோரிக்கை ஏற்பு: சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT