முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்செந்தூரில் மாசித்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசித்திருவிழாவையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 5.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்பு கொடி மரத்திற்கு தீபாராதனை நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவிலின் இணை ஆணையர் (பொறுப்பு) அன்பு மணி, தக்கார் கோட்டை மணிகண்டன், இந்து முன்னணி மாநில தலைவர் அரசுராஜா, துணைத் தலைவர் ஜெயகுமார், திருவாவடுதுறை ஆதீன தவத்திரு அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை தக்கார் கருத்தபாண்டிநாடார், கோவில் அலுவலக கண்காணிப்பாளர் ராஜமோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →