உளுந்தூர்பேட்டை அருகே செம்மரம் வெட்டிய கும்பல்: வனத்துறையினர் விரட்டியதால் லாரியில் தப்பி ஓட்டம்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எடைக்கல் காப்புக்காட்டிற்கு உட்பட்ட வெள்ளையூரில் செம்மரக்கடத்தல் கும்பலை வனத்துறையினர் விரட்டியதால் மரம் வெட்டுதலை கைவிட்டு
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எடைக்கல் காப்புக்காட்டிற்கு உட்பட்ட வெள்ளையூரில் செம்மரக்கடத்தல் கும்பலை வனத்துறையினர் விரட்டியதால் மரம் வெட்டுதலை கைவிட்டு லாரியில் தப்பியோடிவிட்டனர்.
எடைக்கல் காப்பு காட்டிற்குட்பட்ட வெள்ளையூர் அருகே வியாழக்கிழமை நள்ளிரவில் செம்மரம் கடத்தும் 25 பேர் அடங்கிய கும்பல் லாரியில் வியாழக்கிழமை நள்ளிரவு வந்து வெள்ளையூர் அருகேயிருந்த செம்மரங்களை வெட்டினர். அப்பொழுது இரண்டு மரங்களை வெட்டி கீழே சாய்த்தனர். கீழே மரம் விழுந்த சத்தம் கேட்டு இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரகர் முருகேசன் மற்றும் அப்பகுதியில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனவர்கள் முரளிகிருஷ்ணன், வனக்காப்பாளர்கள் ஏழுமலை, விஸ்வநாதன், நஜ்ஜீர் அகம்மது ஆகியோர் அடங்கிய வனத்துறையினர் அக்கும்பலை விரட்டினர். அப்பொழுது அக்கடத்தல் கும்பல் வெட்டிய மரங்களை போட்டுவிட்டு வனத்துறையினர் மீது கற்களை வீசியெறிந்து லாரியில் தப்பியோடினர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை வனச்சரகர்கள் காதர்பாட்சா மற்றும் முருகேசன் ஆகியோர் தப்பிச்சென்ற செம்மர கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.