கெடிலம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: அடித்து கொலையா? போலீஸார் விசாரணை
கடலூர் செம்மண்டலத்திலிருந்து திருப்பாப்புலியூர் செல்லும் வழியில் கம்மியம்பேட்டை பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு கீழே ஓடும் கெடிலம் ஆற்றில் வெள்ளிக்கிழமை காலை அழுகிய நிலையில் ஒரு ஆண்
கடலூர் செம்மண்டலத்திலிருந்து திருப்பாப்புலியூர் செல்லும் வழியில் கம்மியம்பேட்டை பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு கீழே ஓடும் கெடிலம் ஆற்றில் வெள்ளிக்கிழமை காலை அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் மிதந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கடலூர் புதுநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனவருக்கு சுமார் 55 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை. அவர் அடித்து கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா அல்லது வேறு வகையில் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆற்றில் பிணம் மிதந்ததை அவ்வழியே சென்ற பொதுமக்களும், மாணவ, மாணவியர்களும் கம்மியம்பேட்டை பாலத்தில் கூடி நின்று வேடிக்கை பார்த்ததால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் போக்குவரத்தை சரி செய்தனர்.