சிதம்பரத்தில் பரிசு கூப்பன் கொடுத்து பணம் மோசடி: மர்மநபர்கள் மீது வழக்குப் பதிவு
சிதம்பரம் புதுப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஆதிமூலம் (43). இவரது வீட்டிற்கு அண்மையில் இருநபர்கள் வந்து மின்சாரஅடுப்பு விற்பனை செய்துள்ளனர். அடுப்பு வாங்கியதற்கு ஒரு
சிதம்பரம் நகரில் வீடு, வீடாக சென்று பரிசு கூப்பன் கொடுத்து பணம் மோசடிய இரு மர்மநபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் புதுப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஆதிமூலம் (43). இவரது வீட்டிற்கு அண்மையில் இருநபர்கள் வந்து மின்சாரஅடுப்பு விற்பனை செய்துள்ளனர். அடுப்பு வாங்கியதற்கு ஒரு பரிசு கூப்பன் அளித்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை மின்சார அடுப்பு விற்ற மர்மநபர் ஒருவர் செல்போனில் ஆதிமூலத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு மோட்டார் சைக்கிள் பரிசு விழுந்துள்ளது. அதற்கான பதிவுத்தொகை, காப்பீடு தொகை ரூ.13.500 வங்கி கணக்கில் செலுத்தினால், தங்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் எனக்கூறி வங்கி கணக்கு எண் ஒன்றையும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ஆதிமூலம் வங்கி கணக்கில் ரூ.13.500 செலுத்திவிட்டு, மர்மநபரை செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்லிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஆதிமூலம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நகரில் இதுபோன்று பலர் வங்கி கணக்கில் பணத்தை போட்டு ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது.