சிதம்பரம் அருகே தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்
சிதம்பரம் அருகே கே.ஆடூர் தெற்குபகுதியில் உள்ள பூங்கொடி கிராமம் மாரியம்மன்கோவில் தெருவில் வெள்ளிக்கிழமை மதியம் நாகராஜ் என்பவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீ மேலும் பரவி
சிதம்பரம் அருகே கே.ஆடூர் (தெற்கு) பூங்கொடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சேதமுற்றன.
சிதம்பரம் அருகே கே.ஆடூர் தெற்குபகுதியில் உள்ள பூங்கொடி கிராமம் மாரியம்மன்கோவில் தெருவில் வெள்ளிக்கிழமை மதியம் நாகராஜ் என்பவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீ மேலும் பரவி அருகாமையிலிருந்த ஜோதிராஜ், மோகன், பாஸ்கரன், தமிழ்வாணன் ஆகிய 4 வீடுகளும் தீப்பற்றி எரிந்து சேதமுற்றது. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் சுமார் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமுற்றதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.