சிகிச்சைக்காக செல்லும் வழியில் மரத்தில் கார் மோதிய விபத்து : இருவர் சாவு, மூவர் காயம்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மனைவி கண்ணம்மாள் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம்
ஆம்பூர் அருகே சிகிச்சைக்காக சென்றவர்களின் கார் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் சனிக்கிழமை இரவு இறந்தனர். மூவர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மனைவி கண்ணம்மாள் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர். உடன் மொட்டையன், அவருடைய மகள் ராஜம்மாள் (40), மகன் ரமேஷ் (34), ரமேஷின் மனைவி வனிதா (32) ஆகியோர் சென்றனர். காரை ஆம்பூரை சேர்ந்த டிரைவர் மோகன்தாஸ் (25) ஓட்டிச் சென்றாராம்.
மாச்சம்பட்டு கிராமத்தருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியுள்ளது. அதில் மொட்டையன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜம்மாள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்ணம்மாள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ரமேஷ் மற்றும் வனிதா ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
Advertisement
உமர்ஆபாத் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.