முகப்பு
தற்போதைய செய்திகள்

ரயில்களில் திருடியவர் கைது: 57 பவுன் நகைகள் மீட்பு

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணிகளிடம் திருடி வந்த நபரை சேலம் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 57 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

Updated On : 10 பிப்ரவரி, 2014 at 10:48 PM
பகிர்:

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணிகளிடம் திருடி வந்த நபரை சேலம் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 57 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

 சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளிடம் திருடி வரும் நபர்களைப் பிடிக்க ரயில்வே காவல் கண்காணிப்பாளர் கயல்விழி தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

 அதன்படி, டி.எஸ்.பி. செந்தில் மேற்பார்வையில், ஆய்வாளர்கள் மணிகண்டன், லாரன்ஸ், செல்லதுரை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள், ஓசூர் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த ஒரு நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

Advertisement

 விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த மகாலிங்கம் (35) என்பதும், அவர்தான் ரயில் பயணிகளிடம் நகை, பொருள்களைத் திருடி வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

 இதையடுத்து அவரிடம் இருந்த 57 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் மகாலிங்கம், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.