தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் வங்கிகள் மூடல்: வாடிக்கையாளர்கள் அவதி

விருதுநகர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ வங்கி  உள்ளிட்ட தேசிய மையமாக்கப்பட்ட வங்களில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் கிளைகள் அனைத்தும் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ வங்கி  உள்ளிட்ட தேசிய மையமாக்கப்பட்ட வங்களில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் கிளைகள் அனைத்தும் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன. இதனால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் எமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

வங்கிகளில் ஆள்பற்றாக்குறையால் ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி உழியர்கள் சங்கங்களின் சார்பில் பிப்.10,11 ஆகிய நாள்களில் தேசிய அளவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் சில தனியார் வங்கி ஊழியர்களும்  வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், விருதுநகர் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க், கரூர் வைஸ்யா வங்கி உள்ளிட்ட 16 வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் இடங்களில் இயங்கி வரும் 126 வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளை திங்கள்கிழமை அணுகினர். ஆனால், ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மூடப்பட்டிருந்தது கண்டு ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதில், முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் பணிக்கு வந்திருந்த நிலையில் ஊழியர்கள் பணிக்கு வராத நிலையில் திறந்திருந்தது. அதேபோல் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT