தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தி்ங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடத்துப்பட்ட இந்த ஆர்ப்பாட்த்திற்கு வட்டாரச் செயலாளர் கோபால்சாமி தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர் மங்கையர்க்கரசி மற்றும் வட்டார துணைச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதோடு, நெல்லுக்கு ரூ.15000 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ரூ.7500ம் வறட்சி நிவாரணமாக வழங்கவும் வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்கள் அனைத்தையும் விடுபட்டு போகாமல் பார்வையிட்டு பயிர்கடன்களையும் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் மாரியப்பன், விருதுநகர்  ஒன்றியச் செயலாளர் காந்தி உள்ளிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT