முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை ரயில்வே இடைக்கால பட்ஜெட் : தமிழகத்திற்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா?

மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளதால், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் முழுமையான ரயில்வே பட்ஜெட் இந்த முறை தாக்கல் செய்யப்படாது. தேர்தலுக்கு பின்னர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளதால், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் முழுமையான ரயில்வே பட்ஜெட் இந்த முறை தாக்கல் செய்யப்படாது. தேர்தலுக்கு பின்னர் அமையும் புதிய அரசே முழு ரயில்வே மற்றும் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இதனால் நாடாளுமன்றத்தில் நாளை (புதன்கிழமை) ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூனா கார்கே தாக்கல் செய்கிறார்..  தேர்தல் வரவிருப்பதால் பொதுமக்களை கவரும் வகையில் புதிய ரயில் பாதைகள் மற்றும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 பயணிகள் கட்டணம் குறைக்கப்படாது என்றும் .ரயில்வேயின் நிதி நிலையை மேம்படுத்துவது தொடர்பான முடிவுகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது..காத்திருப்பு பட்டியல் நிலவரத்திற்கேற்ப சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீளமுள்ள பாதையை மின் மயமாக்குவது தொடர்பாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டு முழுவதும் காத்திருபபோர் பட்டியல் நிரம்பி வழியும் தென்தமிழகத்தற்கு  இந்த ஆண்டாவது சென்னையில் இருந்து புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.