முகப்பு
தற்போதைய செய்திகள்

பாளை.யில் மருத்துவ ஆய்வகப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவத்துறை ஆய்வகங்களை தனியார் வசம் ஒப்படைக்க ஆட்சேபம் தெரிவித்து பாளையங்கோட்டையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

மருத்துவத்துறை ஆய்வகங்களை தனியார் வசம் ஒப்படைக்க ஆட்சேபம் தெரிவித்து பாளையங்கோட்டையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மருத்துவத்துறை ஆய்வகங்களை தனியார் வசம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக விருதுநகர், ராமனாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவமண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அரசு தலைமை மருத்துவமனைகளில் இயங்கும் ஆய்வகங்களை பிப். 10 ம் தேதி முதல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்தும், ஆய்வகங்களில் காலியாக பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூாியில் இயங்கும் ஆய்வகப் நுட்பனர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் வீ. பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம், தொழில்நுட்ப ஊழியர் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் ஆர். ராஜேஸ்வரன், நிர்வாகிகள் இரா. லோகிதாசன், மந்திரம், மாநிலச் செயலர் குமாரவேல், மாவட்டப் பொருளாளர் செ. பாலமுருகன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →