முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டை அருகே பேருந்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: சுங்க இலாகா துறை நடவடிக்கை

புதுக்கோட்டை அருகே கருவேப்பிலை ரயில்வே கேட் அருகே இன்று சுங்க இலாகாத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

புதுக்கோட்டை அருகே கருவேப்பிலை ரயில்வே கேட் அருகே இன்று சுங்க இலாகாத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் 4 கிலோ 600 கிராம் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு யாரும் உரிமை கோராததால்.  மத்திய சுங்க இலாகா கண்காணிப்பாளர் அலுவலக்த்தில் இந்த தங்க கட்டிகளை கைபற்றி வைத்துள்ளனர்.

இதன் மதிப்பு 1கோடி 29 லடத்து 72 ஆயிரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.