தற்போதைய செய்திகள்

குடிபோதையில் பெண் போலீஸாருடன் தகராறு: போலீஸார் உள்பட 2 பேர் கைது

விருதுநகரில் குடிபோதையில் போக்குவரத்து பெண் போலீஸாரை கையை பிடித்து தகராறு செய்ததாக போலீஸ்காரர் உள்பட இருவரை புதன்கிழமை மேற்கு காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் குடிபோதையில் போக்குவரத்து பெண் போலீஸாரை கையை பிடித்து தகராறு செய்ததாக போலீஸ்காரர் உள்பட இருவரை புதன்கிழமை மேற்கு காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

விருதுநநகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(24). இவர் போக்குவரத்து காவல் பிரிவில் போலீஸாரக பணியாற்றி வருகிறார். இவர் புதன்கிழமை மீனாம்பிகை பங்களா முக்கு ரோடு அருகே பணி செய்து வந்தாராம். அப்போது, போக்குவரத்து நிறைந்த சாலையில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர். உடனே அவர்களை வாகனத்தை நிறுத்தும் படி கூறியுள்ளார். அதற்கு நிறுத்த முடியாது எனக் கூறி முத்துலட்சுமியை கையை பிடித்து தகராறில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக உடனே மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து அங்கு விரைந்த வந்த போலீஸார் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரணை மேற்கொண்டதில் இந்திரா நகரைச் சேர்ந்த வேல்பாண்டி(27) என்பதும், முத்துராமன்பட்டியைச் சேர்ந்த குழந்தைவேல்(28) என்பதும் தெரியவந்தது.

இதில், வேல்பாண்டி என்பவர் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். அங்கிருந்து, அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் ஊருக்கு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. பகலில் பெண் போலீஸாருடன் மற்றொரு போலீஸாரே கையை பிடித்து தகராறு செய்தது அப்பகுதியில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT