முகப்பு
தற்போதைய செய்திகள்

 திருமலையில் அர்ச்சகருக்கு பலத்த காயம்

திருமலையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற, ஸஹஸ்ர தீபாலங்கார சேவைக்காக, உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்க, வீர ராகவ பட்டாசார்யா என்ற அர்ச்சகர், ஸ்டூல் மேல் ஏறிய போது, கால் வழுக்கி

Updated On : 15 பிப்ரவரி, 2014 at 7:34 PM
பகிர்:

திருமலையில், அர்ச்சகர் ஒருவருக்கு சனிக்கிழமை பலத்த  காயம் ஏற்பட்டது.   திருமலையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற, ஸஹஸ்ர தீபாலங்கார சேவைக்காக, உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்க, வீர ராகவ பட்டாசார்யா என்ற அர்ச்சகர், ஸ்டூல் மேல் ஏறிய போது, கால் வழுக்கி கீழே விழுந்தார். அதனால், அவருக்கு தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை திருமலை அஸ்வனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால்,  ஏதாவது அசம்பாவிதம் நிகழுமோ என பக்தர்கள் பயந்தபடி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.