சாமி சிலையைக் கொண்டு சென்ற வாகனம் மரத்தில் மோதி விபத்து: ஒருவர் பலி
ஆந்திர மாநிலம் மல்லேஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள மல்லேஸ்வர சுவாமியை, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் உள்ளவர்கள் குல தெய்வமாகக் கொண்டு
ஆந்திர மாநிலம் மல்லேஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள மல்லேஸ்வர சுவாமியை, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் உள்ளவர்கள் குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றார்கள். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் மல்லேஸ்வர சுவாமி சிலையினை ஊருக்குக் கொண்டு வந்து பூஜை செய்தனர். இன்று சரக்கு வாகனத்தில் அந்த சிலையைக் கொண்டு செல்லும் போது, வேப்பனப்பள்ளி அருகே அத்திகுந்தா பகுதியில் அந்த வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், பக்தர் சின்னச்சாமி (62) என்பவர் பலியானார். மேலும் பக்தர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.