முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை நகரில் விதியை மீறி 103 கட்டடங்கள்: அகற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்

திருநெல்வேலி நகரில் விதிகளை மீறி 9 மீட்டருக்கு  அதிகமான உயரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டடப்பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

திருநெல்வேலி நகரில் விதிகளை மீறி 9 மீட்டருக்கு  அதிகமான உயரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டடப்பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேயர் (பொறுப்பு) பெ. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் (பொறுப்பு) கே.பி. ஜெயசேவியர், நி்ர்வாகப் பொறியாளர்கள் நாராயண்நாயர், செளந்திரராஜன், மாநகராட்சி மருத்துவ அலுவலர் பாலகணேஷ்குமார், மண்டலக்குழுத் தலைவர்கள் கே. மாதவன், என். மோகன், கே. மாதவராமானுஜம், உதவி ஆணையர்கள் து. கருப்பசாமி, ஆ. பெருமாள், சாந்தி, சாமுவேல்செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பணியின்போது இறந்த மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகளான ந. செந்தில்வேல் (துப்புரவு பணியாளர்), ந. முனியாண்டி (துப்புரவு பணியாளர்), மேரி ஜெயராணி (அலுவலக உதவியாளர்) ஆகியோருக்கு பணி நியமன ஆணையினை மேயர் வழங்கினார்.

இந்து முன்னணி: திருநெல்வேலி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தலைவர் டி. பாலாஜிகிருஷ்ணசுவாமி தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள் மேயரிடம் அளித்த மனுவில் : சைவத் திருத்தலமான திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் கோபுரத்தின் பழமையை கருத்தில் கொண்டு, பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் 1994 ல் வெளியிடப்பட்ட அரசாணையில், கோயிலில் இருந்து 1 கி.மீ சுற்றளவுக்கு உள்ள கட்டடங்களின் உயரம் 9 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விதியை மீறி மேலரதவீதி, கீழரதவீதி, வடக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, சத்தியமூர்த்தி தெரு, வ.உ.சி. தெரு, தெற்கு மவுண்ட் சாலை, எஸ்.என். சாலை, சுவாமி சன்னதி தெரு, கல்லத்தி முடுக்குத் தெரு, பாரதியார் தெரு, ஏ.பி. மாடத்தெரு உள்ளிட்ட பகுதியில் 103 கட்டடங்கள் விதிகளை மீறி 9 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான உயரமாக உள்ளன.கோயில் கோபுரத்தையும், கோயிலையும் பாதுகாக்கும் வகையில் விதியை மீறி கட்டப்பட்டு்ள்ள 103 கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டடங்களின் பணியை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீர்: மாநகராட்சி 41 வது வார்டு தெப்பக்குளம் கீழத்தெருவில் குப்பைத் தொட்டி இல்லாமல் அங்கு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. தெருவில் கீழக்கு பகுதியில் கழிவுநீர் ஓடை தூர்வாரப்படாததால், அங்குள்ள குழாயில் குடிநீர் எடுக்க முடியாத நிலை உள்ளது.பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடாக இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதியில் வலம்புரி அம்மன் கோயில் தெரு, தெப்பக்குளம் கீழத் தெருவில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. ஆகவே சீரான குடிநீர் விநியோகம் செய்யவும், கழிவு நீர் ஓடையினை சீரமைக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி (லெனினிஸ்ட்) நிர்வாகிகள் மேயரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →