முகப்பு
தற்போதைய செய்திகள்

வேட்பு மனுவில் சொத்து  மறைப்பு வழக்கு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக  கருணாநிதிக்கு விலக்கு

தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது சொத்து விவரங்களை மறைத்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் கருணாநிதிக்கு விலக்கு அளித்து சென்னை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது சொத்து விவரங்களை மறைத்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் கருணாநிதிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 இது தொடர்பாக கருணாநிதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

 திருவாரூர் சட்டபை தொகுதியில் போட்டியிட கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தேன். அதில், சில சொத்து விவரங்களை மறைத்து விட்டதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரியான திருவாரூர் சப்-கலெக்டர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

  இந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் என் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 நான் தமிழகத்தில் 11 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். எந்த வேட்பு மனுவிலும் இதுவரை எந்தத் தகவலையும் மறைத்தது இல்லை. என்னுடைய தாய் சமாதி இருக்கும் இடத்தை வேட்பு மனு படிவத்தில் நான் குறிப்பிடவில்லை என்பதே என் மீதுள்ள குற்றச்சாட்டாகும்.

 அந்த நிலத்தின் மூலம் எனக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது அதை மறைத்து விட்டேன் என்று என் மீது குற்றம் சொல்வதை ஏற்க முடியாது.

 மாஜிஸ்திரேட் அனுப்பிய சம்மனில் என் மீதான புகார் நகல் இணைக்கப்படவில்லை. இது குறித்து திருவாரூர் நீதிமன்றத்தில் விசாரித்தபோது, நேரில் ஆஜராகும் நாளில் புகார் நகல் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது.

 எனவே, நீதிமன்றத்தில் என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, திருவாரூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனையும் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

 இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு செவ்வாய்க்கிழமை (பிப்.18) விசாரணைக்கு வந்ததது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது தொடரப்பட்ட வழக்குக்கு   இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது. மேலும், திருவாரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கும் விலக்கு அளிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →