முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டசிறப்பு  சிகிச்சை முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் சார்பில் வியாழக்கிழமை நடந்த மருத்துவ சிகிச்சை முகாமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தொடங்கி

Updated On : 20 பிப்ரவரி, 2014 at 6:06 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:57 AM

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் சார்பில் வியாழக்கிழமை நடந்த மருத்துவ சிகிச்சை முகாமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை அருகே முத்துச்சாமி வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சுகாதார துறை இணை இயக்குநர் கதிரேசன் தலைமை வகித்தார். விருதுநகர் நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பங்கேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் பொது மருத்துவம், காது மூக்கு தொண்ட மருத்துவம், கர்ப்பபை நோய்களுக்கான மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை, இதயம் மற்றும நெஞ்சக தொடர்பான நோய்களுக்கான சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு தலைமை மருத்துவமனை பரிந்துரையுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவும் இருக்கிறது.

Advertisement

    இந்த முகாமில் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் சம்பத், மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர். விருதுநகர் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அலுவலர் மற்றும் பொறுப்பாளர் உமாமகேஸ்வரன், உறைவிட மருத்துவர் அன்புவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  

    இதேபோல், அருப்புக்கோட்டை மணிநகரத்தில் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியிலும்,  சிவகாசியில் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில்  திரு.வி.க.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.