கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது...
சென்னை: கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! வெல்வோம் 200; படைப்போம் வரலாறு! என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாா்ச் 30- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.
கடந்த ஏப்ரல் 10 -ஆம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வரும் வேட்பாளா்கள் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. வரும் 23- ஆம் தேதி (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! வெல்வோம் 200; படைப்போம் வரலாறு! என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில்,
நேற்று பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரை தொடங்க ஆயத்தமானேன்….
ஓசூரில் தொடங்கி, சென்னை எண்ணூரில் இரவு 10 மணிக்கு பிரசாரத்தை நேற்று முடித்தேன்.
ஓசூர் முடித்து மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலைகளில் மக்கள் வரவேற்பளிக்க சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வீதி வீதியாக வாக்கு கேட்டுவிட்டு, இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் வாக்குச் சேகரித்து மீனவச் சொந்தம் ஒருவரது வீட்டில் மீன் சாப்பிட்டதும்தான், நேற்றைய நாள் நிறைவுற்றது.
இப்போது, சூரியன் உதித்ததும் அண்ணா நகருக்குப் புறப்பட்டுவிட்டேன்…
கருத்துக்கணிப்புகள் மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்! வெல்வோம் 200; படைப்போம் வரலாறு! என கூறியுள்ளார்.
Be it opinion polls or public predictions we are at the forefront of them all! We will win 200 seats; we will make history! - Chief Minister M.K. Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.