FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது! மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தது பற்றி...

8 செப்டம்பர் 2026, 12:49 pm IST
மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்) - DMK
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் நேற்று (திங்கள்) பதிலுரை அளித்தார். அப்போது முதல்வர் ஜோசப் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் கைதான விவகாரத்தையும் குறிப்பிட்டு முதல்வர் விஜய் விமர்சனத்தை பேசியிருந்தார்.

Advertisement

Advertisement

பேரவையில் இல்லாதவர்களை பற்றியும், நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்குகள் பற்றியும் முதல்வர் விஜய் பேசியதை நீக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர். ஆனால், முதல்வர் விஜய் பேசிய கருத்துகளை நீக்க பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், சட்டப்பேரவை நிகழ்வு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், “மாண்போடு நடக்கிறதா? எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து இரண்டு தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மு.க. ஸ்டாலின் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

summary

The dignity of the Legislative Assembly has been compromised! – M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments