FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்: தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!

1908 திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திமுக அரசின் அறிவிப்பை நிறைவேற்ற மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளது குறித்து...

5 செப்டம்பர் 2026, 8:25 am IST
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

வ.உ. சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு, 1908 திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திமுக அரசின் அறிவிப்பை நிறைவேற்ற தமிழக அரசுக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (செப். 5) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார்.

Advertisement

Advertisement

இது மட்டுமா வ.உ.சி.? திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார்.

இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம்.

அவற்றுடன், 1908 திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம். தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

summary

Former Chief Minister M.K. Stalin urged the Tamil Nadu government on Saturday (Sept. 5) to implement the DMK government's announcement regarding the construction of a memorial for the 1908 Tirunelveli uprising.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments