FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்’ - மு.க. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)
பகிர்:

‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம். பிறப்பால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். அனைவருக்குமான சமத்துவமே நம்முடைய இலக்கு.

Advertisement

Advertisement

மகாபலியை தோற்றவராகக் கொண்டாடாமல், மக்களின் மனதில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் வடிவமாகத் திகழ்ந்த மன்னராகக் கொண்டாடலாம். மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin has extended Onam greetings, expressing the hope that equality may blossom in the land of Mahabali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments