முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை : முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் பங்களா வீட்டின் மீது, இன்று அதிகாலை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசியுள்ளனர் என்று கூறப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் பங்களா வீட்டின் மீது, இன்று அதிகாலை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர் என்று கூறப்பட்டது. ஆனால், அது ஒரு துணியில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீவைத்து வீட்டுக்குள் எறியப்பட்ட தீப்பந்தம் என்று ஒரு தரப்பில் கூறப்பட்டது.

இன்று அதிகாலை 2.45 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு பேர் பிரபுவின் வீட்டுக்குள் பீர் பாட்டிலில் துணி சுற்றி பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பி அதனைக் கொளுத்தி வீட்டுக்குள் எறிந்தனர். அதிர்ஷ்டவசமாக, அந்த பாட்டில்கள் சுவரில் மோதி தோட்டத்தில் விழுந்து வெடித்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.