முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை ரயிலில் ஜெர்மன் பெண் பலாத்காரம்: பீகார் இளைஞருக்கு ஜாமீன் மறுப்பு

மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜெர்மன் நாட்டைச் சேர்நத் 18 வயது பெண் ஒருவர் சென்னைக்கு வந்து கொண்டிரூநதார் அப்போது அதே ரயில் பெட்டியில் பயணம் செய்த

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

ஓடும் ரயிலில் வெளிநாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்த பீகார் இளைஞருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம்  மறுத்துவிட்டது.

மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜெர்மன் நாட்டைச் சேர்நத் 18 வயது பெண் ஒருவர் சென்னைக்கு வந்து கொண்டிரூநதார் அப்போது அதே ரயில் பெட்டியில் பயணம் செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சதன்குமார் (28), அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்தார்.

 இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசில் ஜெர்மன் பெண் புகார் கொடுத்தார். இதனை அடுத்து சதன்குமாரை கைது செய்த போலீஸார் சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கில்  ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சதன்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். அப்போது  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அவர் கூறியதாவது:

 ‘‘மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரயிலில் பலாத்கார சம்பவமே நடைபெறவில்லை. ஏராளமான பயணிகள் இருக்கும் போது பலாத்காரம் என்பது சாத்தியமில்லை. இது பொய் வழக்கு என்று கூறியிருந்தார். ஒரு பெண் அதுவும் வெளி நாட்டைச் சேர்ந்தவர். தனது கற்புக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொய் புகார் கூறமாட்டார். இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அது புகார்தாரருக்கு குந்தகம் ஏற்படும்'' இவ்வாறு நீதிபதி நாகமுத்து தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.