பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை கச்சேரித்தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் கொள்ளையடிக்கு முயற்சியில் வங்கியின் பூட்டை உடைத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு, அருகாமையில் குடியிருக்கும் மக்கள் வெளியே வந்தபோது, மர்மநபர்கள் தலைமறைவாகினர். இதனால் பல லட்சங்கள் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளை போவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.