முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் பிறந்தநாள்: பழனியில் அதிமுக சார்பில் தங்க ரத புறப்பாடு

பழனி மலைக்கோயிலில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

பழனி மலைக்கோயிலில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது.

பழனி மலைக்கோயிலில் தமிழக முதல்வரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு பழனி அதிமுக சார்பில் மலைக்கோயில் மூலவருக்கு ஞாயிற்றுக்கிழமை சாயரட்சையின் போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முதல்வர் பெயரில் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கட்சியினர் தங்கத்தேருக்கு பணம் கட்டி தங்கரத புறப்பாட்டை மேற்கொண்டனர். 

ஏராளமான அதிமுகவினர் தேருக்கு பணம் கட்டியது குறிப்பிடத்தக்கது.  நிகழ்ச்சியில் நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, பழனி தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பழனி நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி மற்றும் முன்னாள் எம்எல்ஏ., சுப்புரத்தினம், நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் விஜயசேகரன், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத் தலைவர் காளிமுத்து, தாராபுரம் பெரியசாமி, அரிமா சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.