சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் முதன் முதலாக திருநங்கை நாட்டியம்!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 33வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை தொடங்கியது. நாட்டியாஞ்சலி விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 33வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை தொடங்கியது. நாட்டியாஞ்சலி விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடக்க நாளான வியாழக்கிழமை இரவு திருநங்கை நர்த்தகி நடராஜின் பரதநாட்டியம் நடைபெற்றது. சிறப்பாக நாட்டியமாடி அனைவரது மனதிலும் அவர் இடம் பிடித்தார்.