பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி தப்பியோட முயற்சி
திருநெல்வேலி அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த செங்கமலவுடையார் மகன் முத்துராமலிங்கம் (32). இவருக்கு, ஒரு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து
திருநெல்வேலி, ஜன. 3:திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த செங்கமலவுடையார் மகன் முத்துராமலிங்கம் (32). இவருக்கு, ஒரு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் உணவு வேளையின்போது வரிசையில் நின்றுகொண்டிருந்த முத்துராமலிங்கம், அங்கிருந்து ஓடி ஜெயிலின் உள்புறம் உள்ள கேட்டில் காவலுக்கு நின்ற போலீஸாரை தள்ளிவிட்டு தப்பமுயன்றராம்.
இருப்பினும் 2-வது கேட்டில் நின்ற காவலர்கள் அவரை பிடித்து ஜெயிலுக்குள் கொண்டு அடைத்தனர். இந்த சம்பவத்தால் சிறை வளாகத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. தப்ப முயன்றவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மனஅழுத்தம் ஏற்பட்டு இச்செயலில் ஈடுபட்டதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன