இடிந்தகரைக்கு 2 ஆண்டுக்கு பிறகு பஸ்கள் இயக்கம்: ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம், இடிந்தரைக்கு பொங்கல் முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெள்ளிக்கிழமை
திருநெல்வேலி மாவட்டம், இடிந்தரைக்கு பொங்கல் முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கூடன்குளத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதாலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு, அணுமின் நிலைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இடிந்தகரைக்கு செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டது.
கடந்த 2 வருடங்களாக இடிந்தகரைக்கு பஸ்கள் இயக்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதனிடையே பொங்கல் முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் மு. கருணாகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இடிந்தகரைக்கு பொங்கல் முதல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராம் இடிந்தரை வழியாக தூத்துக்குடிக்கு செல்லும் புறநகர் பேரூந்து (தடம் எண் 570) மற்றும், வள்ளியூரில் இருந்து இடிக்கரைக்கு நகரப்பேருந்து (தடம் எண் 15) இயக்கப்படும். மேலும் இடிந்தகரைக்கு படிப்படியாக பஸ்கள் இயக்கப்படும் என்றார் அவர்.