முகப்பு
தற்போதைய செய்திகள்

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், இலங்கையில் குடியேறுவோம் : தேசிய மீனவர் பேரவை

வரும் 20-ஆம் தேதி திட்டமிட்டபடி இந்திய -இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறவிட்டால் தமிழக மீனவர்கள் வெள்ளை கொடியுடன் இலங்கையில் அகதிகளாக குடியேறுவோம் என தேசிய மீனவர் பேரவை தலைவர் என்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

வரும் 20-ஆம் தேதி திட்டமிட்டபடி இந்திய -இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறவிட்டால் தமிழக மீனவர்கள் வெள்ளை கொடியுடன் இலங்கையில் அகதிகளாக குடியேறுவோம் என தேசிய மீனவர் பேரவை தலைவர் என்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அவர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: கடந்த 30 ஆண்டுகளாக தமிழக, காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 541 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

401 மீனவர்கள் தற்போது இலங்கை சிறைகளில் உள்ளனர். 113 படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ளனர். 772 பேர் காயமடைந்துள்ளனர். ரூ.1000 கோடி அளவுக்கு மீனவர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையின் செயலால் மீனவர்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது.

இப்பிரச்னையை தீர்க்க இரு தரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய, தமிழக அரசுகள், அறிவித்தன. வரும் 20-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

அதே போல் இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.

தமிழக, காரைக்கால் மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணா விட்டால் வெள்ளை கொடியுடன் இலங்கையில் அகதிகளாக குடியேறுவோம் என்று கூறினார் இளங்கோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.