முகப்பு
தற்போதைய செய்திகள்

வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஏழுபிடாரி கோவில் சிலைகள் திருட்டு: போலீஸார் விசாரணை

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஆதமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலவெளி கிராமத்தில் ஏழுபிடாரிகள் கோவில் ஒன்று உள்ளது. மிகப் பழைமையான இந்தக் கோவில் திறந்த வெளி கோயிலாக உள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஆதமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலவெளி கிராமத்தில் ஏழுபிடாரிகள் கோவில் ஒன்று உள்ளது. மிகப் பழைமையான இந்தக் கோவில் திறந்த வெளி கோயிலாக உள்ளது. இங்கே எட்டு அம்மன் சிலைகள் சுமார் ஒன்றரை அடி உயரத்தில் பீடத்தில் பதிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு சிலைகளும் பாறைகளால் பெயர்த்தெடுக்கப்பட்டு  களவாடப்பட்டிருந்ததை இன்று காலை ஊர் மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →