பாபநாசம், சேர்வலாறில் மின் உற்பத்தி பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடப்பட்டதால் பாபநாசம், சேர்வலாறு மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 3 வது நாளாக சனிக்கிழமையும் மின்சாரம் உற்பத்தி செய்யவில்லை என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதனிடையே அணைகளில் மழை நீடித்ததாலும், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தாலும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன.
பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடப்பட்டதால், அங்குள்ள பாபநாசம், சேர்வலாறு நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டது. சனிக்கிழமை 3 ஆவது நாளாக மின்சாரம் உற்பத்தி செய்யவில்லை. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஞாயிற்றுக்கிழமை அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.