முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி

சிதம்பரத்தில் நகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் கீழரதவீதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி கூடம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

சிதம்பரத்தில் நகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் கீழரதவீதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் கீழரதவீதியில் புதன்கிழமை நடைபெற்ற தொடக்கவிழாவில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் கண்காட்சி கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் போக்குவரத்து விழப்புணர்வு குறித்து விதிமுறைகள், விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் டீவி மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டன. இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.

கண்காட்சி தொடக்கவிழாவில் ஸ்ரீசண்முகவிலாஸ் ஸ்வீட்ஸ் உரிமையாளர் எஸ்.கணேஷ், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.மலைச்சாமி, போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், பிரகாஷ், சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் பேருந்து, வேன், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.