முகப்பு
தற்போதைய செய்திகள்

அம்பாசமுத்திரம் : செங்குளத்தில் பிடிபட்ட மரநாய் வனப்பகுதியில் விடப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பிடிபட்ட மரநாயினை வனத்துறையினர் புதன்கிழமை காட்டில் கொண்டு விட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பிடிபட்ட மரநாயினை வனத்துறையினர் புதன்கிழமை காட்டில் கொண்டு விட்டனர்.

அம்பாசமுத்திரம் அருகே செங்குளத்தில் தனியார் அரிசி ஆலையில் மரநாய் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அம்பசாமுத்திரம் வனச்சரகர் எம். பாலேந்திரன், வனபாதுகாப்புப்படை வனச்சரகர் மணிமாறன் தலைமையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் முருகன், இசக்கிமுத்து ஆகியோர் சென்று சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள மரநாயை பிடித்து மணிமுத்தாறு தலையணைப் பகுதியில் கொண்டு விட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →