முகப்பு
தற்போதைய செய்திகள்

கோழிப் பண்ணையில் தீ விபத்து : 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பலி

கிருஷ்ணகிரி அருகே பெரியமத்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பலியாயின.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே பெரியமத்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பலியாயின.

கடந்த 10 ஆண்டுகளாக கோழிப் பண்ணை நடத்தி வருபவர் ராமன். இவர் நேற்று தனது கோழிப் பண்ணைக்காக 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்து கூண்டுகளில் அடைத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென கோழிப் பண்ணையில் தீ விபத்து நேரிட்டது. இதில், பண்ணை முழுவதும் எரிந்து, அனைத்து கோழிக் குஞ்சுகளும் பலியாகிவிட்டன.

கோழிக் குஞ்சுகளுக்கு குளிர் தாக்காமல் இருக்க கதகதப்பு ஏற்படுத்த பண்ணையில் நெருப்பு மூட்டும் போது இந்த தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தகவல் அறிந்ததும் பருகூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →